உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மின் கம்பி மீது விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு

 மின் கம்பி மீது விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம், மேக மூட்டத்துடன் பலத்த காற்று வீசியது. இதனால், கோடைகால வெப்பத்திற்கு பதில் குளிரான காலநிலை நிலவியது. இந்நிலையில், கொளப்பள்ளியில் இருந்து ஏலமன்னா வழியாக, பந்தலுார் செல்லும்போது சாலையின் ஓரத்தில் காய்ந்த நிலையில் இருந்த கற்பூர மரம் அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும், கம்பியில் விழுந்ததால், மின் சப்ளை பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் கவுன்சிலர் முரளி நேரில் சென்று ஆய்வு செய்து, அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. மின் வாரியத்தினர் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை