உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரு மாநில எல்லையில் மரம் விழுந்து பாதிப்பு; தீயணைப்பு துறைக்கு உதவிய கும்கி யானை

இரு மாநில எல்லையில் மரம் விழுந்து பாதிப்பு; தீயணைப்பு துறைக்கு உதவிய கும்கி யானை

பந்தலுார்; தமிழக- கேரள எல்லையில், வயநாடு சுல்தான் பத்தேரி சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட போது, மரத்தை அகற்றும் பணயில் ஈடுபட்ட கும்கி யானையால் போக்குவரத்து சீரானது. தமிழகம், கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது. அதில், மாநில எல்லையில் உள்ள, வயநாடு சுல்தான் பத்தேரி அருகே ஆனைப்பந்திசாலையின் குறுக்கே நேற்று மரம் ஒன்று விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான் பத்தேரி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மரத்தை அறுத்து துண்டுகளாக மாற்றினர். இப்பகுதியில் உள்ள முத்தங்கா சரணாலயத்தில் கும்கி யானையாக உள்ள சூர்யா வரவழைக்கப்பட்டது. அங்கு தீயணைப்புத் துறையினர் மூலம் சாலையில் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை, கும்கி யானை பாகன் உதவியுடன் அகற்றி வேறு இடத்தில் மாற்றியது. இதனால், போக்குவரத்து சீரானது. தீயணைப்பு துறை அதி காரிகளுடன் மரத்தை அகற்ற கைகோர்த்த கும்கி சூர்யா பணியாற்றுவதை பாத்த பயணிகள் யானைக்கும்; பாகனுக்கும் பாராட்டு தெரிவித்தனர். கும்கி பணிபுரியம் 'வீடியோ' தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி