உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பயிலரங்கில் பங்கேற்ற பழங்குடி மாணவர்கள்

பயிலரங்கில் பங்கேற்ற பழங்குடி மாணவர்கள்

பந்தலுார்;பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில் பழங்குடியின மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடந்தது. நீலகிரி -வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்க திட்ட மேலாளர் ஜான் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பயிற்றுனர்கள் சதீஷ், தாமரை செல்வன் ஆகியோர், மாணவர்களுக்கு கற்றல் திறன், சிந்திக்கும் திறமை, ஒற்றுமை, ஓவியம் வரைதல், பாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். இரண்டு நாட்கள் பயிற்சி பெற்றதன் மூலம், பழங்குடியின மாணவர்கள் தங்கள் மன அழுத்தம், சிந்தனைகளை வெளிப்படுத்தி தீர்வு பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், சசி, சந்திரமோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.75 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்