உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆற்று நீர் கலங்கியதால் பழங்குடியினர் பாதிப்பு; வாகனங்களில் குடிநீர் வினியோகித்த ஊராட்சி தினமலர் செய்தி எதிரொலி

 ஆற்று நீர் கலங்கியதால் பழங்குடியினர் பாதிப்பு; வாகனங்களில் குடிநீர் வினியோகித்த ஊராட்சி தினமலர் செய்தி எதிரொலி

கூடலுார்: முதுமலையின் முக்கிய நீர் ஆதாரமான மாயாறு ஆற்று நீர் கலங்கியதால், அதனை பயன்படுத்த முடியாமல் தவித்த பழங்குடி மக்களுக்கு, மசினகுடி ஊராட்சி நிர்வாகம் வாகனத்தில் குடிநீர் சப்ளை செய்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி கிரன்மார்க்கன் அணை, பராமரிப்பு பணிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிலிருந்து வெளியேறும் கலங்கிய நீரால், முதுமலை மாயாறு ஆற்று நீரும் கலங்கிய நிலையில்காணப்படுகிறது. இதனால், சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால், பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டனர். மாயாறு ஆற்று நீர் வனவிலங்குகளுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகும். எந்த முன்னறிவிப்பும் இன்றி அணையிலிருந்து கலங்கிய நீர் திறக்கப்பட்டதால், மாயாறு ஆற்று நீரும் கலங்கி சுகாதாரமான குடிநீர் கிடைக்க சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தெப்பக்காடு பழங்குடி கிராம மக்களுக்கு, மசினகுடி ஊராட்சி நிர்வாகம் நேற்று முதல் வாகனங்களில் குடிநீர் எடுத்து வந்து, வினியோகம் செய்து வருகிறது. இதனால் பழங்குடி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஊராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாயாறு ஆற்று நீரில் துாய்மையாகும் வரை, கிராம மக்களுக்கு வாகனங்களில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை