உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கூடலுார் : நீட் தேர்வு அச்சத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவ, மாணவியருக்கு, கூடலுாரில் அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.தி.மு.க., ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தில் உயிரை மாய்த்து கொண்ட, 22 மாணவ மாணவியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கூடலுாரில் அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி சார்பில், காந்தி திடலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ஜிபின் தலைமை வகித்தார்.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், முன்னாள் அமைச்சர் மில்லர், பொதுக்குழு உறுப்பினர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் பத்மநாதன், மொய்தின், ஓவேலி பேரூராட்சி செயலாளர் கண்மணி உட்பட பலர், மெழுகுவத்தி ஏந்தி, உயிர் நீத்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ