உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டெலிபோன் டவரில் பேட்டரி திருடிய இருவர் கைது

டெலிபோன் டவரில் பேட்டரி திருடிய இருவர் கைது

பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., மொபைல் டவர்கள் அதிகளவில் உள்ளன. இந்த டவர்களில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டால், இணைப்பு வழங்க ஏதுவாக பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான டவர்களில் பேட்டரிகள் திருடப்பட்டதால், மொபைல் இணைப்பும் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேரம்பாடி சுங்கம் டவரில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., பொறியாளர் சைபு தாமஸ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பேட்டரிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.சேரம்பாடி போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் பேட்டரி திருடிய திவாகரன்,28, பேட்டரியை விலைக்கு வாங்கிய, பழைய இரும்பு கடை நடத்தும் அன்வர்,35, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை