உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தகராறில் ஈடுபட்டு வழிப்பறி; அருவங்காட்டில் இருவர் கைது

தகராறில் ஈடுபட்டு வழிப்பறி; அருவங்காட்டில் இருவர் கைது

குன்னுார்; குன்னுார் அருவங்காட்டில் பணி முடித்து வந்தவரிடம் தகராறு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.குன்னுார் கேத்தி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி முடித்து உமேஷ்,37, என்பவர் இரவு, 11:00 வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அருவங்காட்டில் இருந்து வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு, ஒசட்டி செல்லும் நடைபாதை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த சிலர் குடிபோதையில் இவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி, 350 ரூபாய் வழிப்பறி செய்தனர். சப்தமிட்டு அருகில் இருந்த மக்கள் வந்து ஒருவரை மட்டுமே பிடித்தனர். இது தொடர்பாக, 100 எண்ணில் புகார் அளித்ததன் அடிப்படையில், நீலகிரி எஸ்.பி., நிஷா, டி.எஸ்.பி, முத்தரசு மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி, இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை