உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் விழுந்த மரம்; தப்பிய இரு கார்கள்

சாலையில் விழுந்த மரம்; தப்பிய இரு கார்கள்

குன்னுார்; குன்னுார் பகுதிகளில், பலத்த காற்றின் காரணமாக, மரங்கள் விழுந்து பல மணி நேரம், மின்தடை ஏற்பட்டது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், மழையின் தாக்கம் குறைந்து பலத்த காற்று வீசியது.இதனால், குன்னுார் ஊட்டி சாலையில் காணிக்கராஜ் நகர் அருகே அதிகாலை கற்பூர மரம் அருகே நிறுத்தி வைத்திருந்த, இரு கார்களின் நடுவே மரம் விழுந்தது. எனினும், மரக்கிளைகளால் கார் இன்ஜின் பகுதி சேதமானது. மின்தடை ஏற்பட்டது.தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். பேரிடர் பாதிப்பால், மின்வாரிய ஊழியர்கள் பெரும்பாலும் கூடலுார் பகுதிகளுக்கு சென்ற நிலையில், மின்கம்பங்கள் சீரமைப்பில் பாதிப்பு ஏற்பட்டது. எனினும், இங்குள்ள சில ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதேபோல கேட்டில் பவுண்ட் பகுதியில் மின்கம்பத்தின் மீது மரம் விழுந்து மின்தடை ஏற்பட்டது.இதனால், அருவங்காடு, கேட்டில் பவுண்டு உட்பட பெரும்பாலான இடங்களில், மூன்று இணைப்புகளில், இரு இணைப்புகளில் மின் தடை, 13 மணி நேரத்திற்கு நீடித்ததால் மக்கள் பாதிப்படைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை