உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நகர மன்ற கூட்டத்திலிருந்து இரு கவுன்சிலர் வெளிநடப்பு

 நகர மன்ற கூட்டத்திலிருந்து இரு கவுன்சிலர் வெளிநடப்பு

கூடலுார்: கூடலுார் நகர மன்ற கூட்டம், தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் (பொ) சக்திவேல் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் உஸ்மான், வர்கீஸ்: நகராட்சியில் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கும் ஒப்பந்தம், குறிப்பிட்ட சிலருக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதில் தவறு நடக்கிறது. இப்பணிகளை, பொது டெண்டர் முறையில் வழங்க வேண்டும். இதன் மூலம் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். கமிஷனர்: கவுன்சிலர்கள் ஆதரவின் அடிப்படையில் தீர்மானம் நிறை வேற்றலாம். இதனை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள் உஸ்மான், வர்கீஸ் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர். தொடர்ந்து, நடந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ