உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதி உதவி; ஐந்து பயனாளிகளுக்கு வைப்பு தொகை பத்திரம்

இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதி உதவி; ஐந்து பயனாளிகளுக்கு வைப்பு தொகை பத்திரம்

ஊட்டி; பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வைப்புத் தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 188 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை பத்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 7 பயனாளிகளுக்கு உலமாக்கள், பணியாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மொத்தம், 10 பயனாளிகளுக்கு, 3.24 லட்ச ரூபாய் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து, 1.98 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை