உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகன விபத்தில் இருவர் காயம்

வாகன விபத்தில் இருவர் காயம்

ஊட்டி: -ஊட்டி அருகே நடந்த வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர். ஊட்டி -- குன்னூர் சாலையில் சுற்றுலா வாகனங்கள் உட்பட, உள்ளூர் வாகனங்களின் இயக்கம் அதிகமாக உள்ளது. சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டம், ஊட்டி -- குன்னூர் சாலையில், பன்சிட்டி சந்திப்பு அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில், காரில் பயணித்த இருவர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஊட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை