உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  5 கிலோ கஞ்சாவுடன் இரு வாலிபர்கள் கைது

 5 கிலோ கஞ்சாவுடன் இரு வாலிபர்கள் கைது

பாலக்காடு: பாலக்காடு அருகே, 5 கிலோ கஞ்சாவுடன் இருவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு இன்ஸ்பெக்டர் விபின் வேணுகோபால் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு தெங்கரை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், ஆட்டோவில் இருந்தவர்கள் திருச்சூர் மாவட்டம் ஆம்பல்லூர் பகுதியைச் சேர்ந்த அன்சார், 29, பாலக்காடு மாவட்டம் கரிம்புழா பகுதியைச் சேர்ந்த சரத், 27, ஆகியோர் என்பதும், அப்பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை