உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடையின்றி மின் உற்பத்தி பூர்த்தியாகும்; குடிநீர் தேவை கை கொடுக்கும் அவலாஞ்சி அணை

தடையின்றி மின் உற்பத்தி பூர்த்தியாகும்; குடிநீர் தேவை கை கொடுக்கும் அவலாஞ்சி அணை

ஊட்டி : அவலாஞ்சி அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பில் இருப்பதால், தடையின்றி மின்சாரம், குடிநீர் தேவை பூர்த்தியாகி வருகிறது.ஊட்டி அருகே, குந்தா மின் வட்டம் அவலாஞ்சியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையம் வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, 'குந்தா, 60; கெத்தை, 175; பரளி, 180; பில்லுார், 100' மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.நடப்பாண்டு ஜூன் இறுதி வரை எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீர் மின் உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்தது. மின் உற்பத்தி, குடிநீர் ஆதாரத்திற்கு தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ததால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக நீர் மட்டம் உயர்ந்தது. தற்போது அணையில், 160 அடி வரை தண்ணீர் இருப்பில் உள்ளது. அவலாஞ்சி அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பு இருப்பதால், இந்த தண்ணீரை நம்பியுள்ள மின் நிலையங்களில் தடையின்றி மின் உற்பத்தி நடந்து வருகிறது. குடிநீர் தேவையும் பூர்த்தியாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி