வல்லரசை நோக்கி வளர்ச்சி அடைந்த பாரத பயணம் மத்திய இணை அமைச்சர் முருகன் பெருமிதம்
குன்னுார்: ''அப்துல் கலாமின் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கி, 2047ல் உலகில் வல்லரசாக திகழும் நாடாக மாற்றும் பயணம் தொடர்கிறது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார். நீலகிரி மாவட்டம், குன்னுார் எடப்பள்ளி சித்தகிரி தர்ம க்ஷேத்ராவில், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான 'கோல் இந்தியா லிட்' நிதியுதவியில், 5 கோடி ரூபாய் மதிப்பில், நடமாடும் வாகனத்தில், மகளிருக்கான, புற்றுநோய் மருத்துவ பரிசோதனை நவீன பிரிவு துவக்க விழா நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8slxaep5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்து பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் மேம்பாட்டுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழகத்தின் மீது அவருக்கு அலாதி பிரியம் உள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி உட்பட தமிழகத்தில், 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. நாட்டின் மத்திய அரசு சுகாதாரத்தில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது புற்றுநோய் என்றால் மகளிர் இடையே அச்சமும், விழிப்புணர்வு இன்மையும் உள்ளது. நீலகிரியில் பழங்குடியினர் உட்பட ஏழை எளிய மக்களுக்கு இதனை ஆரம்ப நிலையில் கண்டறியும் விதமாக நடமாடும் வாகனத்தில் மருத்துவ பரிசோதனை பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மகளிருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்துல் கலாமின் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக்கி, 2047ல் உலகில் வல்லரசாக திகழும் நாடாக மாற்றும் பயணம் தொடர்கிறது. அனைவருக்கும் உணவு, சுகாதாரம் என மக்களுக்கான நலத்திட்டங்கள் உட்பட வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது,''என்றார். விழாவில், தர்மஷேத்ரா தலைவர் மாதா சக்தி மயி, கோல் இந்தியா லிட் இயக்குனர் ராஜேஷ் சந்தர், ஊட்டி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் போஜராஜ், குன்னூர் முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு, உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக சாய்பாபா, மகாலட்சுமி கோவில்களில் தரிசனம் செய்தனர்.