உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பில்லாத ஊட்டி - வேலிவியூ சாலை; ஜனாதிபதி வருகைக்கு முன்பாக சீரமைக்கப்படுமா?

பராமரிப்பில்லாத ஊட்டி - வேலிவியூ சாலை; ஜனாதிபதி வருகைக்கு முன்பாக சீரமைக்கப்படுமா?

ஊட்டி ; ஊட்டி - வேலிவியூ தேசிய நெடுஞ்சாலையை ஜனாதிபதி வருகைக்கு முன்பாக முழுமையாக சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி - குன்னுார் தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாலையில் ஆங்காங்கே தடுப்பு சுவர், மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக ஆங்காங்கே கட்டுமான பொருட்களும் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.அதில், ஊட்டியிலிருந்து வேலிவியூ மற்றும் எல்லநள்ளி வரையிலான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலை சீரமைப்புக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் சென்று வரும் வாகனங்களுக்கு இடையூறாகவும் கட்டுமான பொருட்கள் உள்ளன. தினசரி ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் இந்த தேசிய நெடுஞ்சாலையை இத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். இம்மாதம், 27ம் தேதி ஊட்டி வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்மு, குன்னுார் ராணுவ கல்லுாரி நிகழ்ச்சிக்கு சாலை மார்கமாக செல்வதாக கூறப்படுகிறது.மக்கள் கூறுகையில்,'ஊட்டிக்கு ஜனாதிபதி வருவதற்கு முன்பாக, இச்சாலையை முழுமையாக சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை