உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் கடும் குளிரான காலநிலை ;சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

ஊட்டியில் கடும் குளிரான காலநிலை ;சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

ஊட்டி : ஊட்டியில் தொடரும் மழை; குளிரான காலநிலை காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில், கோடை சீசன் நேரங்களில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வார இறுதி விடுமுறை நாட்களிலும், எட்டு முதல் பத்தாயிரம் வரை பயணிகளின் வருகை உள்ளது. இரண்டாவது சீசன் நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்தது. நேற்று மழை குறைந்த போதும், கடும் குளிரான காலநிலை நிலவியது. இதனால், கடந்த சில நாட்களாக, பயணிகளின் வருகை படிப்படியாக குறைந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். ஊட்டி நகர சாலைகளில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததால், நெரிசல் இல்லாமல் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ