உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஓட்டுப்பதிவு நடத்தி சங்க தேர்தல்; சுற்றுலா ஓட்டுனர் நிர்வாகிகள் தேர்வு

ஓட்டுப்பதிவு நடத்தி சங்க தேர்தல்; சுற்றுலா ஓட்டுனர் நிர்வாகிகள் தேர்வு

குன்னுார்; குன்னுாரில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.குன்னுார் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் தேர்தல், குன்னுாரில் நடந்தது. 160 பேர் கொண்ட, இந்த சங்க தேர்தலுக்காக, 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில், துணை தலைவர் இக்பால் தீன், துணை செயலாளர் பாப்பண்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, தேர்தல் அறைகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், தலைவராக சிவக்குமார்; செயலாளராக கிருஷ்ணமூர்த்தி; பொருளாளராக தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் பொறுப்பாளர்களாக, அம்ஜத் பாட்சா, கணேஷ் ராவ், ரமேஷ் ஆகியோர் பணியாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ