வீணாகும் அயனி பலா மரத்துண்டுகள்
கூடலுார் : கூடலுார் நர்த்தகி பகுதி சாலையோரம் பழமையான அயனி பலா மரம் விழும் நிலையில் இருப்பதாக கூறி, கடந்த, மே மாதம் வெட்டினர். நல்ல நிலையில் இருந்த மரம் வெட்டப்பட்டது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, வெட்டப்பட்ட மரத்தை ஆய்வு செய்த வனத்துறையினர், அதனை எடுத்து செல்ல தடை விதித்தனர். வெட்டப்பட்ட, மரம் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மக்கள் கூறுகையில்,'வனத்துறையினர் அந்த மரத் துண்டுகளை எடுத்து சென்று, பாதுகாப்பாக வைத்து, மரத்துண்டுகளை மதிப்பீடு செய்து, ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்னும் சில நாட்கள் விட்டால் மரம் கடத்தப்படும் அபாயம் உள்ளது,' என்றனர்.