‘நீர் பனியால் கடுங்குளிர்’
பந்தலூர்: பந்தலூர் பகுதியில் காலை நேரத்தில், நீர் பனி பெய்வதால் கடுமையான குளிர் நிலவ துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கேரளா மாநில காலநிலை நிலவி வரும் நிலையில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால், முக்கிய நீர் ஆதாரங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. மழைக்கால காலநிலைக்கு பதில், சமவெளி பகுதிகளைப் போல் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. பகல், இரவு நேரங்களில் மின்விசிறி மற்றும் ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளது. நேற்று முதல் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் நீர் பனி பொழிவு துவங்கியுள்ளது. தேயிலை தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள், நடைபாதைகளை ஒட்டி காணப்படும் புல்வெளிகளில் நீர் பனி நிறைந்து காணப்படுகிறது. காலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவ துவங்கி உள்ளதுடன், மக்கள் வெளியில் நடமாட சிரமப்பட்டு வருகின்றனர்.