உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புது காலனியில் தண்ணீர் பிரச்னை; முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு

புது காலனியில் தண்ணீர் பிரச்னை; முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு

கோத்தகிரி; கோத்தகிரி புதுகாலனி பகுதி தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட, புது காலனி பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு, கிணறு மற்றும் மின்மோட்டார் அமைத்து தராததால், தண்ணீர் தட்டுபாடு பிரசனை தீர்க்கப்படாமல் உள்ளது. மாநில முதல்வர், மாவட்ட நிர்வாகம் உட்பட, சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு பல முறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பணிகள் நடைபெற, நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கவதாக, அதிகாரிகள் கூறினாலும், இதுவரை, பணி துவக்கப் படவில்லை. இதனை கண்டித்து, வரும், 14ம் தேதி கிராம பிரமுகர் வில்சன் தலைமையில், தேனாடு ஊராட்சி மன்ற அலுவலக முன்பு, மக்கள் ஒருங்கிணைந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். இது குறித்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !