மேலும் செய்திகள்
உங்களை தேடி உங்கள் ஊரில்' ஆவடியில் 18ல் கள ஆய்வு
12-Sep-2024
மஞ்சூர் : மஞ்சூரில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மஞ்சூர் குந்தா தாலுகா அலுவலகத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். அதில், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, துறை சமூக பாதுகாப்பு திட்டம், மருத்துவ மற்றும் சுகாதார திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை,' என, பல்வேறு திட்டங்களின் கீழ், 23 பயனாளிகளுக்கு, 1.88 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின், இத்தலார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற கலெக்டர், பதிவேடுகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். கூடுதல் கலெக்டர் கவுசிக், குந்தா தாசில்தார் கலைச்செல்வி உட்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
12-Sep-2024