வேகத்தடை உள்ள சாலையில் வெள்ளை கோடு வரையும் பணி
கோத்தகிரி : கோத்தகிரி -குன்னுார் -ஊட்டி சாலையில் வேகத்தடைகளில் வெள்ளை கோடு வரையும் பணி நடந்து வருவதால், ஓட்டுனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.ஊட்டிக்கு, ஜனாதிபதி முர்மு வருகையின் போது, பாதுகாப்பு கருதி மேட்டுப்பாளையம் முதல், கோத்தகிரி, குன்னுார் மற்றும் ஊட்டி வழித்தடத்தில், சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதிகளில் வேகத்தடை அமைக்காததால், விபத்துகள் ஏற்பட்டு வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், வேகத்தடையில் வெள்ளை கோடு வரையாததால், இரவு நேரங்களில் வாகனங்கள் சென்று வருவதில், சிரமம் ஏற்பட்டதுடன் விபத்துகள் நடந்தன. இந்நிலையில், கோத்தகிரி சாலையில் வேகத்தடையில் வெள்ளை கோடு வரையும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஓட்டுனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.