சாலையோரத்தில் காட்டெருமை; பைக்கில் செல்பவர்கள் அச்சம்
குன்னுார்; குன்னுார்-- ஊட்டி சாலையில் வளைவான பகுதியில், ஓய்வெடுக்கும் காட்டெருமையால் பைக்கில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.குன்னுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், பிளாக் பிரிட்ஜ் அருகே வயதான காட்டெருமை, ஓய்வெடுத்து வருகிறது. வளைவான இந்த பகுதியில், தினமும் வந்து ஓய்வெடுத்து செல்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். சில நேரங்களில் இரவு நேரத்தில் ஓய்வெடுப்பதால், வாகனங்கள் மோதி காட்டெருமைக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணிகளை மேற்கொண்டு, சாலையோரத்தில் இருக்கும் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.