நகரில் காட்டெருமை உலா; இளைஞரை முட்டியதால் காயம்
ஊட்டி; ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப் பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், ஊட்டி ஹில்பங்க் சாலையில் சென்ற காட்டெருமை, இருசக்கர வாகனத்தில் வந்தவரை முட்டி துாக்கி வீசியது. வாகனத்தில் வந்த இளைஞர் காயமடைந்தார். அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.