உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தை உலா வந்த இடத்தில் காட்டு பூனைகள்; புதரை அகற்ற வாரியத்திற்கு பரிந்துரை

சிறுத்தை உலா வந்த இடத்தில் காட்டு பூனைகள்; புதரை அகற்ற வாரியத்திற்கு பரிந்துரை

குன்னுார் : குன்னுார் வெலிங்டன் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்த இடத்தில் காட்டு பூனைகள் காணப்பட்டதால், புதரை அகற்ற கன்டோன்மென்ட் வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.குன்னுார் வெலிங்டன் ரயில் நிலையம் அருகே புதர் சூழந்த இடத்தில், பகல் நேரத்தில் சிறுத்தை ஓய்வெடுத்ததாக, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.தொடர்ந்து, இரண்டு நாளாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, ஆடு மேய்த்தவரும் தகவல் கொடுத்தார். ஆய்வு செய்த குன்னுார் வனத்துறையினர், கன்டோன்மென்ட் அதிகாரி குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.இந்நிலையில், நேற்று வெலிங்டன் ரயில் நிலையம் அருகே புதரில், குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதாக வந்த தகவலின் பேரில், ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்போது அங்கு இருந்தது காட்டு பூனைகள் என தெரிய வந்தது.எனினும், அவ்வப்போது சிறுத்தைகள் வந்து செல்வதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இந்த பகுதியில் புதர்கள் சூழ்ந்துள்ளதால் காட்டு பூனைகள் உள்ளிட்டவை தஞ்சமடைகிறது. இவை சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, கன்டோன்மென்ட் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதரை அகற்ற பரிந்துரைத்து கடிதம் வழங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ