மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
19 hour(s) ago
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார்:குறுமிளகு கொடிகளில் 'வாடல்' நோய் பரவலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலை, காபி தோட்டங்களில், ஊடுபயிராக குறுமிளகு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு ஒருமுறை பயன் தரும், குறுமிளகு நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் குறுமிளகு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த காலங்களில் தேயிலை, காபி தோட்டங்கள் முழுவதும் குறு மிளகு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து, பல்வேறு நோய்களால் குறுமிளகு விவசாயம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது ஒரு சில இடங்களில், மட்டுமே காணப்படும் குறுமிளகு தோட்டங்களில் குறுமிளகு விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. மாறிவரும் காலநிலையால், குறுமிளகு கொடிகளில் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி, வாடல் நோய் ஏற்படுகிறது.தற்போது, குறுமிளகு அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், 'வாடல்' நோயால் குறு மிளகு முழுவதும் உதிர்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும்.இதனால், குறுமிளகு விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தோட்டக்கலை துறையினர் நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்க வேண்டும். என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 hour(s) ago
03-Oct-2025