வடுக தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்
குன்னுார்; குன்னுார்-- மேட்டுப்பாளையம் மலை பாதையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அங்கு பல ஆண்டுகளாக நடமாடி வந்த ஒற்றை குள்ள கொம்பன் உபதலை பழைய அருவங்காடு வழியாக ஊட்டிக்கு சென்றது.இந்நிலையில், தற்போது, 9 காட்டு யானைகள் குன்னுார்-- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டுள்ளன. வடுக தோட்டம், மிலிட்டரி தோட்டம், கே.என்.ஆர்., உட்பட சுற்றுப்புற பகுதிகளில் உணவை தேடி யானைகள் உலா வருகின்றன. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.