உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலக்காட்டில் பெண் கத்தியால் குத்திக்கொலை

பாலக்காட்டில் பெண் கத்தியால் குத்திக்கொலை

பாலக்காடு : பாலக்காடு அருகே, தகராறில் மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் தோலனுார் பகுதியைச்சேர்ந்தவர் ராஜன் 60. இவரது மனைவி சந்திரிகா 52, இவர்களுக்கு, வித்யா, வினிதா ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் வித்யா திருமணமாகி பெருங்கோட்டுகுறிச்சியில், கணவர் மனீஷுடன் வாழ்ந்து வருகிறார்.பொருளாதார பிரச்னை காரணமாக, தோலனுாரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு, கடந்த இரு வாரம் முன், கிணாச்சேரி உப்பும்பாடம் என்ற பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து மகள் வினிதாவுடன், கணவன், மனைவி இருவரும் தங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை ராஜன், சந்திரிகா இடையே தகராறு நடந்துள்ளது.ஆத்திரமடைந்த ராஜன் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து, சந்திரிகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சந்திரிகா சம்பவ இடத்திலேயே ரத்தம் வெள்ளத்தில் உயிரிழந்தார்.தாக்குதலில் ராஜனின் வயிற்றில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டது. மேல் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த வினிதா, தந்தை அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.ஊர் மக்கள், ராஜனை திருச்சூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சந்திரிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை