மேலும் செய்திகள்
அரசு மருத்துவ கல்லுாரியில் காலாண்டு கூட்டம்
10 minutes ago
கூடலுார்:கூடலுார் நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து, வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தி, பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.கூடலுார் மார்த்தோமா நகரை சேர்ந்த பேபி என்பவருக்கு சொந்தமான, 370 சதுர அடி வீட்டுக்கு, நகராட்சி சார்பில், 1,692 ரூபாய் வீட்டு வரி நிர்ணயம் செய்துள்ளனர். நகராட்சி அதிகாரிகளை சந்தித்து வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தினார். தொடர்ந்து, வீட்டு வரி, 1,600 ரூபாயாக குறைத்துள்ளனர். வீட்டு வரி மேலும் குறைக்க வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று, நகராட்சி அலுவலகம் முன், கருப்பு கொடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.நகராட்சி தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ் மற்றும் ஊழியர்கள் அவரை அழைத்து, 'வீட்டு வரி குறைப்பது குறித்து, ஆய்வு செய்து சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்தனர். அதனை ஏற்று, போராட்டத்தை கைவிட்டார்.
10 minutes ago