உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் : 147 மாணவர்களுக்கு பணி ஆணை

கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் : 147 மாணவர்களுக்கு பணி ஆணை

ஊட்டி;-ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், 147 மாணவர்களுக்கு நேரடி பணி ஆணை வழங்கப்பட்டது.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'நான் முதல்வன் திட்டம்', பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி ஆகியவை சார்பில், பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கல்லூரி வளாகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் சனில், முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, மாணவர்களை தேர்வு செய்தனர்.பதிவு செய்த, 812 மாணவர்களில், 556 பேர் பங்கேற்றனர். இதில், 147 மாணவர்கள் நேரடி பணி நியமன ஆணை பெற்றனர். தவிர, 187 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம், 334 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.இதில், வேலைவாய்ப்பு அதிகாரி பாலசுப்ரமணியம், நான் முதல்வன் மாவட்ட திட்ட அலுவலர் தீபக்ராம், சரண்யா, வேலைவாய்ப்பு குழு அலுவலர்கள் காயத்ரி, பிரவீணா தேவி மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை