மேலும் செய்திகள்
ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
05-Sep-2025
ஊட்டி; இயேசு கிறிஸ்து தனது, 33வது வயதில் ஜெருசலேமில் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர், சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்ட பின்பு, கல்லறையில் அடக்கம் செய்தபோது அவர் மீது, ஒரு வெள்ளை நிற துணியை போர்த்தி அடக்கம் செய்தனர். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு அந்த வெண்ணிற ஆடை மட்டும் கல்லறையில் இருந்தது. அந்த ஆடையில், இயேசு கிறிஸ்துவின் முகம், தலை, உடல் சிலுவையில் அறையப்பட்டபோது அவருக்கு இருந்த தழும்புகள் பதிந்திருந்தது. தற்போது வரை அந்த துணி இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த துணி ஆறு நகல்கள் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஆறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு நகல், ஊட்டியில் தென்னகத்தின் கல்வாரி என அழைக்கப்படும் குருசடி திருத்தலத்தில் நிரந்தரமாக வைக்கப் பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்து, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கிறிஸ்துவ மக்கள் மற்றும் பொதுமக்கள் குருசடி திருத்தலத்திற்கு வந்து அந்த துணியை வணங்கி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
05-Sep-2025