உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒயிலாட்டம் மயிலாட்டம் தந்தி மாரியம்மன் ஊர்வலம்

ஒயிலாட்டம் மயிலாட்டம் தந்தி மாரியம்மன் ஊர்வலம்

குன்னுார்;குன்னுார் டென்ட்ஹில் முனீஸ்வரர் கோவிலில், 55வது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தந்தி மாரியம்மன் திருவீதி உலா நேற்று விமரிசையாக நடந்தது.காலை, 9:00 மணிக்கு ஹோமம் மற்றும் முனீஸ்வரர் ராஜகணபதி சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. தொடர்ந்து, தந்தி மாரியம்மன் அலங்கார ரதம் புறப்பட்டது. அதில், முனீஸ்வரர் மகளிர் அணியினரின் சீர் தட்டு ஊர்வலம், புதுச்சேரி கிராமிய நடன கலாசார கலை கூடத்தின் மயிலாட்டம், ஒயிலாட்டம், புலி நடனம், தாரை தப்பாட்டம் மற்றும் மேளதாள முழக்கங்களுடன் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம், சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், இசை கச்சேரி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்