உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் மண்டல கால்பந்து போட்டி; 32 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அசத்தல்

குன்னுாரில் மண்டல கால்பந்து போட்டி; 32 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அசத்தல்

குன்னுார்; மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளவும், பள்ளிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவும், ஐ.சி.எஸ்.சி மற்றும் ஐ.எஸ்.சி பள்ளிகள் ஒன்றிணைந்து மண்டல அளவிலான போட்டிகளை நடத்தி வருகின்றன.குன்னுார் ஜோசப் மேல்நிலை பள்ளி மைதானத்தில், ஐ.சி.எஸ்.சி மற்றும் ஐ.எஸ்.சி., பிரிவு மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள், 3 நாட்கள் நடந்தன. கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 32 பள்ளிகள் பங்கேற்றன. முதல் நாள் மாணவியருக்கான கால்பந்து போட்டியில், 4 பள்ளிகள் பங்கேற்றன.மாணவர்களுக்கான போட் டியில், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 14 அணிகள்; 17 வயதுக்கு உட்பட்டோரில், 10 அணிகள்;19 வயதுக்கு உட்பட்டோரில், 8 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தது. குனியமுத்துார் நிர்மலா மாதா மாணவர்கள்தங்களது சிறப்பாக விளையாடினர். இதில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், பொள்ளாச்சி சாந்தி பள்ளி அணியை 4----2 என்ற கோல் கணக்கில் வென்றனர். முதல் மூன்று இடங்களை, பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ