உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / யோகா கல்வி முகாம் துவக்கவிழா

யோகா கல்வி முகாம் துவக்கவிழா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மூலம் யோகா கல்வி முகாம் துவக்க விழா நடந்தது. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்ட முழுவதும் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மூலம் யோகா கல்வி முகாம் 7 நாட்கள் நடைபெறுகிறது. இதன் துவக்க விழா பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜன் தலைமை வகித்து யோகா கல்வி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் ஆடிட்டர் தியாகராஜன் மாணவர்களுக்கு யோகாசன பயிற்சிகளின் அவசியம் செய்முறை மற்றும் நன்மைகளை விளக்கிக்கூறினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜெயராமன் வரவேற்றார். பெரம்பலூர் விஷன் திட்ட அலுவலர் நிஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி