உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சர்க்கரைப்பிரிவு மாநில துணை தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் வரும் 17ம் தேதி ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 4 தொகுதிகளிலும் மே தின பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, 20ம் தேதி சங்கம் சார்பில் நலிந்தோர் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் இளங்கோவன், பசும்பலூர் கோவிந்தசாமி, மாவட்ட இணைசெயலாளர் ராமலிங்கம், டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் அன்பழகன், அரியலூர் கோட்ட போக்குவரத்து கழக பொறுப்பாளர்கள் காசிநாதன், நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை