உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / தாய்க்கு காரியம் செய்த பின் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

தாய்க்கு காரியம் செய்த பின் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

பெரம்பலுார்:பெரம்பலுார் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த அங்கப்பன் மகன் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான முத்து நகர் பகுதியில் உள்ள வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக பெரம்பலுார் போலீசுக்கு தகவல் வந்தது. உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டை உடைத்து, பெரம்பலுார் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது ஹாலில் பெண் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார்.அவர் உடலை சுற்றி தர்ப்பைப்புல், எலுமிச்சை பழம் போன்றவை இருந்தன. அதே வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில், வாலிபர் ஒருவர் துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார். போலீசார் விசாரித்ததில், இறந்தவர்கள் சர்வானந்தம் மகன் ஸ்ரீராம்குமார், 34, மற்றும் அவரது தாய், 70 வயது மூதாட்டி என்பதும் தெரிந்தது.இவர்களின் சொந்த ஊர் காரைக்குடி; தற்போதைய முகவரியில் ஓராண்டாக வசித்து வருவதும் தெரிந்தது.தாய் இறந்த பின் அவருக்கு காரியம் செய்த வாலிபர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் தான், தர்ப்பைப் புல் போன்ற பொருட்கள் பெண்ணின் உடல் அருகே கிடந்துள்ளன. இறந்தவர்களை ஒரு வாரத்திற்கு முன், அருகில் வசிப்பவர்கள் பார்த்ததாகவும், இறந்து போன பெண் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கால்களில் புண்கள் இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி