மேலும் செய்திகள்
ஏரியில் மூழ்கி 2 சிறுமியர் பலி
28-Sep-2025
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், வேலுார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 60; அ.தி.மு.க., கிளை செயலர். இவரது மனைவி பிச்சாயி, 57, என்பவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்லம்மாள், 50, என்பவருக்கும் கடந்த, 24ம் தேதி பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. செல்லம்மாள் புகாரில், சுப்ரமணி மகன் இருவர் உட்பட நான்கு பேரை பெரம்பலுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் இதே ஊரை சேர்ந்த தி.மு.க., கிளை செயலரான செந்தில்குமார், 47, செல்லம்மாளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், செந்தில்குமார், சுப்ரமணி குடும்பத்துக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த, 7ம் தேதி இரவு, 9:30 மணியளவில் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். படுகாயமடைந்த சுப்ரமணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பலுார் போலீசார், செந்தில்குமார் உட்பட இரு தரப்பையும் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
28-Sep-2025
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025