உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / சவுக்கு சங்கர் வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்

சவுக்கு சங்கர் வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்

பெரம்பலுார்,:சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சவுக்கு சங்கர், 48; பிரபல யூடியூபரா-ன இவர், சில மாதங்களுக்கு முன் திருச்சியை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவருடன் பெண் போலீசாரை இணைத்து பேசியதாக தமிழகம் முழுதும் பெண் போலீசார் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதியப்பட்டது. இதேபோல், பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் செந்தமிழ்ச்செல்வி பெரம்பலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கடந்த மே 6ம் தேதி கொடுத்த புகாரின்பேரில், ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், ஆஜர்படுத்துவதற்காக சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை அழைத்து வந்த பெரம்பலுார் மாவட்ட போலீசார், பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பர்வத்ராஜ் ஆறுமுகம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரின் வக்கீல்கள் ஆஜராகி ஒரே பிரச்சனைக்காக தமிழகம் முழுதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற காவலை நிராகரிக்க வேண்டுமெனவும், போலீஸ் கஸ்டடி கொடுக்கக்கூடாது எனவும் வாதிட்டனர். இதனையடுத்து, போலீஸ் கஸ்டடி கொடுக்க நீதிபதி மறுத்துவிட்டார். சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கியும், அழைக்கும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும், ஒரு வாரத்துக்குள் இருநபர் பிணையத் தொகை 20 ஆயிரம் ரூபாயை செலுத்தவும் நீதிபதி பர்வத்ராஜ் ஆறுமுகம் உத்தரவிட்டார். பின்னர், சவுக்கு சங்கரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்