மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக அகிலா மஹால் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று பெறுவதற்காக திருமண மண்டபத்தின் மேலாளர் துரைராஜ் பெரம்பலூர் தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார் .மனுவினை விசாரித்த துணை தாசில்தார் பழனியப்பன் தடையின்மை சான்று வழங்குவதற்காக 20,000 லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார்.லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையின் படி இன்று இரவு 6.30 மணியளவில் மண்டப மேலாளர் துரைராஜ் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று துணை தாசில்தார் பழனியப்பன் கூறியதன்பேரில் அங்கிருந்த கீழக்கரை விஏஓ நல்லுசாமியிடம் 20 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென தாலுகா அலுவலகத்தில் உள்ளே சென்று லஞ்சம் பெற்ற இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேம சித்ரா வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025