மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலுார்:விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் முகமதுஹாஜா. இவர், பதவி உயர்வில் பெரம்பலுார் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்று கொண்டார். நேற்று மாலை 3:43 மணிக்கு பெரம்பலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை, மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றார். அப்போது, இரண்டாம் தளத்தில் உள்ள அந்த அலுவலகத்துக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரு லிப்டுகளில் ஒன்றில், சக அலுவலர்களுடன் ஏறினார். ஆறு பேர் மட்டுமே பயணிக்க முடியும் என அறிவிப்பு பலகை இருந்தும், அதை கவனிக்காமல் ஏழு பேர் ஏறியதால் லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது. உடன் வந்த மற்ற அலுவலர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்த நிருபர்களிடம் போனில் தகவல் தெரிவித்தனர்.அவர்கள், துறை அலுவலர்கள் மூலம் லிப்ட் எலக்ட்ரீஷியனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த எலக்ட்ரீஷியன், லிப்ட் பழுதை சீர் செய்தார். 23 நிமிடத்துக்கு பின் லிப்ட் இயக்கப்பட்டு, சிக்கிய ஏழு அலுவலர்களும் பத்திரமாக வெளியில் வந்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025