உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ஆசிரியை கொலை வழக்கில் சக ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஆசிரியை கொலை வழக்கில் சக ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, பெண் ஆசிரியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சக ஆசிரியரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், 44, தீபா, 42, இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. கடந்தாண்டு நவ., 15ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.இதுகுறித்து, 18ம் தேதி வெங்கடேசன் மனைவி காயத்ரி, தீபா கணவர் பாலமுருகன் புகாரின்படி, பெரம்பலுார், வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடினர். விசாரணையில், கள்ளத்தொடர்பு இருந்ததால் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தீபாவை வெங்கடேசன் அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.தொடர்ந்து, சென்னையில் பதுங்கி இருந்த வெங்கடேசனை தனிப்படை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வெங்கடேசனை குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிடக் கோரி, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஷ்யாம்ளாதேவி பரிந்துரை செய்தார்.பரிந்துரையை ஏற்ற பெரம்பலுார் கலெக்டர் கற்பகம், வெங்கடேசனை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை வி.களத்துார் போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை