மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலூர்:-பெரம்பலுார் அருகே வீட்டை விற்பதாக கூறி ரூ. 46.70 லட்சம் பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்ட மகளிரணி செயலர் சுஜாதாவை போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார் மாவட்டம், எசனை கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி சுஜாதா, 45. இவர், தொண்டபாடி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மனைவி சாந்தி, 35, என்பவரை அணுகி, தன்னுடைய வீட்டை விற்கவுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டை கிரயத்திற்கு பேசியபடி சாந்தி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் கடந்த 2023 பிப்., 18ம் தேதி வரை தவனை முறையில் 46 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை சுஜாதாவிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, வீட்டை தனது பெயருக்கு மாற்றி தருமாறு சுஜாதாவிடம், சாந்தி பலமுறை கேட்டுள்ளார். ஆனால், வீட்டை விற்க மறுத்ததோடு, சுஜாதா மற்றும் அவருடைய கணவர் அன்பழகன், 56, மகன்கள் அபிமன்யூ, 25, ரேஸ்மணி, 24, தமிழரசு, 58, இவரது மனைவி கவிதா, 49, ஆகிய 6 பேர் சேர்ந்து சாந்தியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட சாந்தி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலுார் போலீசார் பணமோசடியில் ஈடுபட்ட சுஜாதா உட்பட 6 பேர் மீது வழக்குபதிந்து சுஜாதாவை நேற்று கைது செய்தனர். பின், பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025