உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / பெட்ரோல் குண்டு வீச்சு வி.சி., பிரமுகர் மகன் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு வி.சி., பிரமுகர் மகன் கைது

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, உள்ள நரசிங்கபாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமைராஜ். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளரான இவரது மகன் பிரேம்குமார், 21. டிப்ளமோ மெக்கானிக் படித்து விட்டு, கூலி வேலை செய்து வருகிறார்.இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால், அந்தப் பெண், பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அந்தப் பெண் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த பிரேம்குமார், பஸ் ஸ்டாப் முன் உள்ள சாலையில் பெட்ரோல் குண்டை வீசி விட்டு, தப்பி ஓடினார்.தகவல் அறிந்த, சம்பவ இடத்திற்கு சென்ற மீன்சுருட்டி போலீசார், விசாரணை நடத்தி, பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி