உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / மந்திரம் செய்து வக்கீலை கொல்ல சதி பேராசிரியர், சென்னை மந்திரவாதி கைது

மந்திரம் செய்து வக்கீலை கொல்ல சதி பேராசிரியர், சென்னை மந்திரவாதி கைது

பெரம்பலுார்:நண்பனாக இருந்து எதிரியாக மாறிய வக்கீலை கொல்ல, சென்னை மந்திரவாதியுடன் சேர்ந்து சதி செய்ததாக, பேராசிரியர், மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார், நான்கு ரோடு சிவசக்தி நகரை சேர்ந்தவர் முரசொலி மாறன், 26; வக்கீல். பெரம்பலுார், அபிராமபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் கிருஷ்ணா, 40; தனியார் கல்லுாரியில் பேராசிரியர். நண்பர்களாக இருந்த இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. ரமேஷ் கிருஷ்ணா, முரசொலி மாறனை கொல்ல திட்டமிட்டார்.சென்னை, திருல்லிக்கேணி நடுக்குப்பம் ரகு, 45, என்பவர், தன்னை குட்டி சாத்தான் சாமியார் என்றும், தன் பூஜைகள் மற்றும் மாந்திரீகம் வாயிலாக, பலரது பிரச்னைகளை தீர்ப்பேன் என, 'யு - டியூப்'பில் வீடியோ பதிவிட்டிருந்தார்.இதைப்பார்த்து, ரகுவை மொபைல்போனில் தொடர்பு கொண்ட ரமேஷ்கிருஷ்ணா, முரசொலி மாறனை மாந்திரீக பூஜை வாயிலாக கொலை செய்ய வேண்டும் என, கேட்டார். அதற்காக முரசொலி மாறன் போட்டோவை அனுப்பியுள்ளார். இதற்காக ரகுவிற்கு, 21 லட்சம் ரூபாய் அனுப்பினார். தகவலறிந்த முரசொலிமாறன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க, பெரம்பலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார், ரமேஷ் கிருஷ்ணா, ரகு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஏற்கனவே, திருச்சியை சேர்ந்த சதீஷ்பாபு என்ற பட்டதாரிக்கு அரசு வேலை வாங்கி தருவதற்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி, ரகு மோசடியில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை