ஏரியில் மூழ்கி 2 சிறுமியர் பலி
வேப்பந்தட்டை:ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமியர் உயிரிழந்தனர். பெரம்பலுார் மாவட்டம், வெங்கலம் தெற்கு காட்டுக்கொட்டகையை சேர்ந்த சுரேஷ் மகள் புஷ்பா, 13; அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். ரங்கநாதன் மகள் செல்வக்கனி, 12; தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு விடுமுறை விடப்பட்டதால், நேற்று மாலை, இருவரும் வெங்கலம் பெரிய ஏரிக்கு குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கினர். அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் மாடு மேய்த்தவர்கள் சென்று காப்பாற்றுவதற்குள், இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். வேப்பந்தட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.