மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், அய்யலுார் கிராமத்தை சேர்ந்தவர் 43 வயது சமையல் மாஸ்டர். இவரது மனைவி தகராறு செய்து கொண்டு, சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 2022 மார்ச் 13ம் தேதி, வீட்டில் இருந்த தன், 13 வயது மகளை, அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த கொடூரத்தை அந்த சிறுமி தன் தாய்க்கு தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த தாய், பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை மீது வழக்கு பதிந்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு பெரம்பலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி இந்திராணி, காமுக தந்தைக்கு 40 ஆண்டு சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025