உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / மாணவர் கூட்டமைப்பு தொடக்கம்

மாணவர் கூட்டமைப்பு தொடக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில், கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவன செயலாளர் நீலராஜ், துணை தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை நிறுவனர் பாண்டியகுலராஜா மாணவர் சங்கத்தை தொடக்கி வைத்து பேசினார். இதில் கல்வி நிறுவனஙகளின் இயக்குநர்கள் மணி, பூபதி, கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், துணை முதல்வர் இளங்கோவன், துறைத்தலைவர் ஜெயந்தி, மாணவர் சங்க தலைவர் விவேக் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி