மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், அக்கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்களது விருப்ப மனுவை நேற்று தாக்கல் செய்தனர். அப்போது முதல் விண்ணப்பத்தை அளித்து கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நகராட்சி தலைவர் பதவிக்கு 2,500 ரூபாயும், உறுப்பினர் பதவிக்கு 250 ரூபாயும், டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு 500 ரூபாயும், உறுப்பினர் பதவிக்கு 100 ரூபாயும், மாவட்ட பஞ்., உறுப்பினர் பதவிக்கு 100 ரூபாயும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 250 ரூபாயும், பஞ்., தலைவர் பதவிக்கு 250 ரூபாயும், உறுப்பினர் பதவிக்கு 100 ரூபாயும், செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்., 12ம் தேதி நேற்று முதல் 14ம் தேதி வரை மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களிடம் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் வாசுதேவன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் செல்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025