உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்

பெரம்பலூர்: பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள், டான் அறக்கட்டளை ஆகியவை சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்த காரை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜகோபால், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் சுந்தரம், கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் தமயந்தி ஆகியோருக்கு சி.இ.ஓ., ராஜன் விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். ஆசிரியர் பயிற்சி நிறுவன பொறுப்பாசிரியர் இளையராஜா, விரிவுரையாளர் தீபா உட்பட பலர் பேசினர். இதில் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர் ஜான்வெஸ்லி வரவேற்றார். மாணவி கவிமலர் நன்றிகூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி