உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / சிறுமிக்கு தாலி நபருக்கு கம்பி

சிறுமிக்கு தாலி நபருக்கு கம்பி

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், சாத்தம்பாடியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் விஜய், 22; கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது வீட்டில் பெண் கேட்டார். சிறுமியின் வீட்டார் பெண் கொடுக்க மறுத்ததால், தன் பெற்றோர் உதவியுடன் கடத்தி, கட்டாயப்படுத்தி தாலி கட்டினார்.பின், தன் வீட்டுக்கு கடத்திச் சென்று, பலாத்காரம் செய்து, சிறுமியை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பினார்.சிறுமியின் புகார்படி, ஜெயங்கொண்டம் போலீசார் நேற்று, விஜயை 'போக்சோ'வில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். போலீசார், தலைமறைவாக உள்ள விஜயின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை